தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி பகுதியில் உள்ள விலாசம் கணபதி திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டது. உதவி ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.