புளியங்குடியில் விபத்து..இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த ராஜாமணி மகன் அருண்குமார் (23). பொறியியல் பட்டதாரி. புளியங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் சிந்தாமணிக்கு பைக்கில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, தென்காசி-மதுரை சாலையில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதாம். இதில், அவர் உயிரிழந்தார். புளியங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி