டாஸ்மாக் ஊழல்: எம்ஆர்பியை விட அதிக விலை.. அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

தமிழக டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று (அக்.14) குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. எம்.ஆர்.பி.யை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதுடன், அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களும் விற்கப்படுகின்றன என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது என்றும், அந்த பணம் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தினந்தோறும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி