திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம் - வாசுகி தம்பதியின் மகன் யோகதாஸ் (30) சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் இந்தோனேஷிய பெண் டயானா டீபு (26) உடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் முத்து மாரியம்மன் கோயிலில் டயானாவுக்கு, யோகதாஸ் தாலி கட்டினார். தமிழ்ப்பெண் போல் பட்டுச்சேலையில் டயானா ஜொலித்தார்.