உலகம் முழுவதும் இன்று (செப் 10) தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில், போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுகளை முன்னெடுக்க பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பேரணியை நேற்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்.
நன்றி: Air News Chennai