36 மாணவிகளின் ஆபாச படம் தயாரித்த மாணவன் கைது

சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் உள்ள ஐஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர் ரஹீம் அத்னன் அலி (21).  ரஹீம் அக்கல்லூரியில் பயிலும் 36 மாணவிகளின் புகைப்படங்களை AI மூலம் ஆபாச படங்களாக உருமாற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போலி படங்களை வைத்து கொண்டு மாணவிகளை பிளாக்மெயில் செய்ய அவர் முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரின் பேரில், ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி