சிவகங்கை: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பி. அய்யாபட்டி பகுதியில் ராமு (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சாலைகிராமத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை பொருள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி