சிவகங்கையில் அரசு பேருந்து - பள்ளி வாகனம் மோதல்: பேரிகார்டுகளால் விபத்து?

சிவகங்கையில் அரசு பேருந்து பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தனியார் பள்ளி வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நகர்புறங்களில் தேவையில்லாத இடங்களில் வைக்கப்படும் பேரிகார்டுகள் விபத்துகளுக்கு வழிவகுப்பதாக போக்குவரத்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இடத்திலும் பேரிகார்டுகள் இருந்ததாகவும், இது விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிவகங்கை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி