சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் மற்றும் அருகாமையில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டி வருவதாகவும், மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனை முழுவதும் கரும்புகை சூழ்ந்து, நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற அவதிக்குள்ளாகினர்.