மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி குறைப்பு ஆகியவற்றை கண்டித்தும், இதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் முன்னிலை வகித்தார். திமுக, காங்கிரஸ், இ. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி