சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிருபாலை கிராமத்தில் பாஜக மாவட்டச் செயலாளர் ராஜ் பிரதீப் மீது சிலர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் தேசியத் தலைவர் எச். ராஜா அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இளையான்குடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.