காரைக்குடி மாநகராட்சி: தெருநாய்களுக்கு இனப்பெருக்கக் கட்டுப்பாடு

காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு, 36 வார்டுகளுடன் மேலும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு பெரிய மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. இங்கு தெருநாய்கள் பெருகி, விபத்துகளையும், பொதுமக்களைக் கடித்து காயப்படுத்துவதையும் கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறையினர் இணைந்து தெருநாய்களைப் பிடித்து, இனப்பெருக்கக் கட்டுப்பாடு ஊசி போட்டு வருகின்றனர். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி