தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த நந்தினி, சாய்பிரியா, தனுஷா ஆகிய 3 சகோதரிகளும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.