12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று (நவ., 04) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்குகிறது. இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் உள்ள பெயர்களை நீக்கி, தகுதியான வாக்காளர்களை மட்டுமே சேர்க்கும் பணியை அரசு ஊழியர்கள், அரசியல் கட்சி முகவர்கள் துணையுடன் மேற்கொள்கின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதியும், இறுதிப் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதியும் வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்தி