SIR, அதிக குழப்பத்தை உணாக்கி இருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். இன்று (நவ.5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”SIR குறித்து தேர்தல் ஆணையம் நடத்திய பயிற்சிகள் முறையானதாக இல்லை. பல இடங்களில் வாக்காளர்களுக்கு தேர்தல் பணியாளர்கள் முறையாக விண்ணப்பங்களை வழங்கவில்லை. பீகாரில் நடத்திய எஸ்.ஐ.ஆர் விட தற்போது தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொண்டு வந்துள்ள SIR அதிக குழப்பத்தை உண்டாக்கியுள்ளது” என்றார்.