ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த செப்.19, 20-ம் தேதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த குழு பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி