தலைவலிக்கு சர்க்கரை நோய்க்கான மாத்திரை கொடுத்ததால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், தலைவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு சர்க்கரை நோய்க்கான 100 மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அந்த பெண் மருத்துவரிடம் கேட்டபோது, 'ஒன்றும் ஆகாது செல்லுங்கள்' என்று அலட்சியமாக பதிலளித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.