'மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி'.. சீமான் பங்கேற்பு

சென்னை: தமிழ் தேசிய சிந்தனையாளர் அருகோ என்கிற அரு.கோபாலன் அவர்களின் படத்திறப்பு மற்றும் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.8) நடைபெறுகிறது. 1958-ல் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கிய சி.பா.ஆதித்தனார் உடன் இணைந்து பணியாற்றிய அருகோவுக்கு 2016-ல் 'சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது' வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணியரசன், சீமான், வேல்முருகன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி