தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அறிவுரைகளை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது, மாணவர்கள் காட்டன் ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். மேலும், பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியை வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.