இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனையில் தலையில் காயம் இருந்தது தெரிய வந்தது. மேலும் இறந்த பெண் 18 வயது உடையவர் என தெரிய வந்தது. எனவே 18 வயது இளம்பெண் மர்ம நபர்களால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என பிரேத பரிசோதனையின் போது கண்டறியப்படவில்லை.
இருப்பினும் அந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தனித்தனியாக எடுத்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவுகள் வந்தபிறகு தான் அந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என தெரியவரும்.
அதே நேரத்தில் அந்த இளம்பெண்ணின் உடலில் சுற்றப்பட்டிருந்த பெட்சீட் லாட்ஜ்களில் பயன்படுத்தும் வகை என்பதால், அந்த இளம்பெண்ணை லாட்ஜ் ஒன்றில் வைத்து மர்ம நபர்கள் பலாத்காரம் செய்திருக்கலாம்? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
கொலை குறித்து தனிப்படை போலீசார் சுங்கசாவடி, தங்கும் விடுதி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.