சேலம்: பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; வடமாநில தொழிலாளி கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மகுடஞ்சாவடி கோயில் திருவிழாவில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார் (22) என்பவர், 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மாணவி தனது தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, விஷ்ணுகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்தி