சேலம் ராஜகணபதி கோவிலில் புதிதாக கட்டப்பட்ட வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டபம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா மற்றும் மேயர் ராமச்சந்திரன் முன்னிலையில், அமைச்சர் ஆர். ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி மண்டபங்களை திறந்து வைத்தார். இந்த மண்டபங்கள் சோனா கல்வி நிறுவனம் மூலம் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா தெரிவித்தார்.