சேலம்: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடாததால் ரேபிஸ் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளி குப்புசாமி (43) மூன்று மாதங்களுக்கு முன்பு தனது நாயால் கடிக்கப்பட்டார். உரிய தடுப்பூசி போடாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் குடிக்க முடியாமல், நாய் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் பரிசோதனையில் ரேபிஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி