சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த நாராயணன் (64) என்பவர், மதுரையில் உறவினர் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, பெங்களூரு திரும்ப சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறினார். அப்போது, அவர் தனது 6½ பவுன் நகைகள் அடங்கிய சூட்கேஸை பேருந்தின் பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு பார்த்தபோது சூட்கேஸ் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் நகைகளுடன் சூட்கேஸை திருடிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.