சேலம் அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் மற்றும் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோட்டை மாரியம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்து இரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. குமாரசாமிப்பட்டி கோவிலில் அம்மனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. இரு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சில பெண்கள் அன்னதானம், துல்லுமாவு, கூழ், சர்க்கரை பொங்கல் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி