சேலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

சேலம் கருப்பூர் அருகே, 65 வயது பெரியசாமி என்ற முதியவர், விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்துள்ளார். சிறுமி அழுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தனர். சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி