நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி நேற்று சூரமங்கலம் மண்டலத்தில் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளப்பட்டி ஏரி பகுதியில் ரூ. 3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவு தெரு, சுகாதார வளாக கட்டுமான பணி, நிலத்தடி கழிவுநீர் கட்டமைப்பு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மூக்கனேரியில் ரூ. 23 கோடியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.