சேலத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட மறுத்தவர் பலி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி குப்புசாமி (43). இவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. ஆனால், அதற்கு அவர் எந்த விதமான தடுப்பூசியோ, சிகிச்சையோ எடுக்காமல் இருந்துள்ளார். இதனால், சமீபத்தில் அவருக்கு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (ஆகஸ்ட் 19) உயிரிழந்தார். அவரின் மகனையும் நாய் கடித்து, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நலமுடன் உள்ளார்.

தொடர்புடைய செய்தி