சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் இன்று (வியாழக்கிழமை) அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. இம்முகாமில் சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஏற்கனவே கல்வி கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக்கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறலாம். குறிப்பாக, ஏற்கனவே வங்கிகளில் கல்விக்கடன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும், புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ. டி. ஐ படிப்பதற்கும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.