சேலம் மாவட்ட கலெக்டரிடம் இந்து இறை தொண்டாளர்கள் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே ஒழுக்கமின்மை காரணமாக போதைப்பழக்கம், பாலியல் குற்றங்கள், திருட்டு, சாதிய வன்மம் போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுக்கு 3 முறை மனநல ஆலோசகர், சட்ட வல்லுனர்கள், காவல் அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு நல் ஒழுக்கம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.