சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 28). இவர் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அந்த சிறுமியின் உறவினர்கள் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய சதாம் உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.