சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

சேலம் கோட்டம் சார்பில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்று முதல் நாளை 5-ந் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், தர்மபுரி, ஓசூர் பேருந்து நிலையங்களில் இன்று மாலை 4 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி