சேலம் ராணுவ வீரர் மொபட்டில் திருடிய 2 பேர் கைது

சேலம் அருகே ஆனைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் (30) விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த செல்போன் மற்றும் ரூ. 2,500 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், காடையாம்பட்டியைச் சேர்ந்த முருகன் (26) மற்றும் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கமலேஷ் (23) ஆகியோர் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி