ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்

தாரமங்கலம் நகராட்சியில் சதீஷ்குமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இது குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், தாரமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்ற பாஸ்கர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி