ஓமலூரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்

ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பாத்திமா மெட்ரிக் பள்ளி அருகே, வார்டுகளுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவி போல் பாய்ந்து சாலைகளில் வழிந்தோடி வீணாகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி