ஓமலூர் பாகல்பட்டி ஓம் சக்தி நகரில் பூட்டிய வீட்டில் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 63). இவர் மத்திய அரசின் காப்புரிமை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைய மகன் மணிகண்டனின் வீட்டுக்கு தம்பதி சென்று விட்டனர். 

பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் பெங்களூருவில் இருந்து ஓம் சக்தி நகர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ. 5 ஆயிரம் திருட்டு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி