சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ராஜேந்திரன், M. R. K. பன்னீர்செல்வம், MP டி.எம்.செல்வகணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சிக்கொடிகள், பதாகைகள் மற்றும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.