ஓமலூரில் போக்குவரத்து காவலர் நியமனம் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், மின்வாரிய அலுவலகம், காவல் நிலையம் ஆகியவை இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம். பள்ளி குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பாக சாலையை கடக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இப்பகுதியில் போக்குவரத்து காவலரை பணியில் அமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி