தர்மபுரி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர், கோவை சரக ஐஜி, சேலம் போலீஸ் கமிஷனர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, புத்தகங்களை வழங்கினர். பின்னர், முதலமைச்சர் காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, சாலை மார்க்கமாக தர்மபுரிக்கு புறப்பட்டார்.