சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனை நிஷாந்தினி, மாவட்ட அளவில் பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பதக்கங்கள் வென்றுள்ளார். தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் இவர், விளையாட்டு போட்டிகளில் மேலும் சாதனை படைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், கூலி வேலை செய்யும் பெற்றோர்களால் வெளியூர் சென்று பயிற்சி பெற போதிய வசதி இல்லை என கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரியிடம் நிதி உதவி கோரி மனு அளித்துள்ளார்.