துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து அருள் கூறுகையில், கொலை செய்யும் நோக்கில் என் மீது தாக்குதல் நடத்தினர்; எல்லாரும் * அன்புமணி உடன் இருப்பவர்கள்தான். அன்புமணியின் டீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா? என்றார்