மேட்டூர் கதவணை மின் நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால், செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட 7 கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நேற்று மதியம் முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 18-ஆம் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மின் நிலையங்களின் பாதுகாப்பு கருதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீர்வரத்து குறைந்ததை அடுத்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி