இதைக்கண்டு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை போலீசுக்கு தெரியாமல் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் கம்மம்பட்டி கஸ்தூரி கோம்பை கிராமத்திற்கு எடுத்துச்சென்று எரிக்க முயன்றனர்.
இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மாணவியின் உடலை தீ வைத்து எரிப்பது தெரியவந்தது. இதையடுத்து எரிந்து கொண்டிருந்த மாணவியின் உடலில் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து பாதி எரிந்த நிலையில் உடலை மீட்டனர். பின்னர் மாணவியின் பெற்றோரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.