மேட்டூர் வனத்துறை கட்டிடத்தில் தோட்டாக்களை திருடிய 4பேர்கைது

மேட்டூர் வனத்துறைக்கு சொந்தமான கட்டிடம் அருகே, பழைய மோட்டார்கள், சாமான்கள் மற்றும் துப்பாக்கி தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து தோட்டக்கள் மற்றும் பழைய தளவாடப் பொருட்களை திருடிச் சென்றனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், மேட்டூரை அடுத்த அச்சங்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் (28), பிரவீன் (25) மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் வனத்துறையினர் பிடித்து மேட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி