தலைவாசல் அரசு மது பாட்டில் பதுக்கி விற்பனை மூன்று பேர் கைது

சேலம் மாவட்டம் தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த புகாரையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தலைவாசல் அருகே ராமநாதபுரம் பகுதியில் வீரகனூர் போலீசார் நடத்திய ஆய்வில், வீட்டில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த செல்வம், சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வி, ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிமளா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி