சேலம் மாவட்டம் தேவூர் அருகே குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (68), தனது மகன் விஜயகுமார் (38) அடிக்கடி பென்ஷன் பணம் கேட்டு தகராறு செய்ததால், கடந்த 22-ஆம் தேதி கீழே தள்ளி கட்டையால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த தங்கவேல், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (நவ.2) பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.