ஜலகண்டாபுரத்தில் ரூ. 8¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை ஜலகண்டாபுரத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்தில், மேட்டூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 110 மூட்டை கொப்பரை தேங்காய் முதல்தரம் கிலோ ரூ. 162.90 முதல் ரூ. 217.70 வரையும், இரண்டாம் தரம் கிலோ ரூ. 100.10 முதல் ரூ. 160.50 வரையும் விற்பனையானது. மொத்தம் ரூ. 8¼ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனையானதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி