சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட ராசிபுரம் பிரிவு சாலை பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் ராசிபுரம் நாமக்கல் செல்லும் பேருந்துகள் திட்டா நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து கரூருக்கு பாரம் ஏற்றிச்சென்ற லாரி பழுதாகி தரைப்பாலத்தில் நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவளியாகச் செல்லும் வாகனங்களை நரசிங்கபுரம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.