பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில், ஒரு துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் எம்எல்ஏ அருளின் கார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன. எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.