சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், தேன், பன்னீர், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா சஷ்டி கிருத்திகை நண்பர் குழு மற்றும் வீரபத்திரர் சுப்பிரமணியர் சுவாமி டிரஸ்ட் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.